கர்ப்பமாக இருக்கிறேன் – பாடகி ஸ்ரேயா கோஷல்..!

பாடகி ஸ்ரேயா கோஷல் தனது ட்வீட்டர் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

பாடகி ஸ்ரேயா கோஷல் முதன்முதலாக தேவதாஸ் என்ற இந்தி திரைப்படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ், இந்தி, மலையாளம், என பல்வேறு மொழிகளில் தனது இனிமையான குரலால் படி தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தே வைத்துள்ளார்.

இவரும் ஷிலாதித்யா என்பவரும் காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்தது. இந்த நிலையில் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதற்கு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.