பணமதிப்பு நீக்கத்தால் என்ன பலன் கிடைத்தது என்பதை சொல்ல நான் தயாராக இல்லை…!மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

பணமதிப்பு நீக்கத்தால் என்ன பலன் கிடைத்தது என்பதை சொல்ல நான் தயாராக இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், தேர்தல் வரும் நிலையில் பணமதிப்பு நீக்கத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நல்ல எண்ணத்தில்தான் பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி .பணமதிப்பு நீக்கத்தால் என்ன பலன் கிடைத்தது என்பதை சொல்ல நான் தயாராக இல்லை  என்றும்  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.