நான் சவாலான விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருப்பேன் : நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால்  பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். இந்நிலையில், தற்போது வெப் தொடர்களுக்கு மக்களிடையே நல்ல வரவெப்பு கிடைத்து வருகிற நிலையில், இவர் வெப் தொடரில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ” தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள நான், சவாலான புதிய விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருப்பேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில், அவர் புதிய பயணத்தை ஆரம்பிக்க இருப்பதாகவும், வெங்கட் பிரபு எடுக்கும் புதிய வெப் தொடரில் அவர் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், 10 தொடர்களாக வெளிவரும் இந்த தொடர்கள், ஆகஸ்டில் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.