ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி நடைபெறவில்லை – மத்திய அரசு

ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி நடைபெறவில்லை – மத்திய அரசு

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் பிரித்து எடுக்கும் பணி நடைபெறவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நாகப்பட்டினம் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி தாலுகாவையும் இணைத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக வரையறுத்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இப்பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முன்னதாக மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில்,தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் பணி நடைபெறவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மக்களவையில் இன்று திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி எழுத்து பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Join our channel google news Youtube