#BREAKING: டெல்லியை நொறுக்கி தள்ளிய ஐதராபாத்.! 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 47 ஆம் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – விருத்திமன் சஹா களமிறங்கினார்கள்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 34 பந்துகளில் 66 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சஹா 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக மனிஷ் பாண்டே 44 ரன்கள் அடித்து, 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் 2 விக்கெட்களை இழந்து, 219 ரன்களை டெல்லிக்கு இலக்காக நிர்ணயித்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் டெல்லி அணி சார்பாக நோர்ட்ஜ் மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரரர்களான அஜின்கியா ரஹானே மற்றும் ஷிகர் தவான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் பெரிய ரன்களை அடிக்காமல் தடுமாற்றத்தை கண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியாக ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி 19 ஓவர் முடிவில் 131 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து, 88 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

ஹைதராபாத் அணி பந்துவீச்சை பொறுத்தளவில் ரஷீத் கான் 3, சந்தீப் சர்மா மற்றும் நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மேலும், டெல்லி அணி சார்பாக ரிஷாப் பந்த் அதிகபட்சமாக 35 பந்துகளில் 36 ரன்களும், அஜின்கியா ரஹானே 19 பந்துகளில் 26 ரன்களும் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

12 seconds ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

26 mins ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

37 mins ago

படமே இல்லாத நயன்தாராவுக்கு பம்பர் வாய்ப்பு?

Nayanthara : பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல். நயன்தாராவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பது…

44 mins ago

500 அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்!

Election2024: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் 500 அரசு ஊழியர்கள் ஏமாற்றம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு…

1 hour ago

இந்தியாவுக்காக வாக்களியுங்கள்.! குஷ்பூவின் பதிவால் குழம்பிய பாஜகவினர்.!

Election2024 : பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ #Vote4INDIA என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 19)…

1 hour ago