கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!

கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!

ஐபிஎல் டி20 தொடரின் 8-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி ஷேய்க் சையத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ், வார்னர் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் பேர்ஸ்டோவ் 5 ரன்னில் விக்கெட்டை இழக்க மனிஷ் பாண்டே களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த வார்னர் 36 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர், சிறப்பாக விளையாடி வந்த மனிஷ் பாண்டே  51 ரன்கள் குவித்தார். அதில், 2 சிக்ஸர் , 3 பவுண்டரி அடங்கும். இதைத்தொடர்ந்து, விருத்திமான் சஹா 30 எடுக்க இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர்.

கொல்கத்தா அணி  143 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.

Latest Posts

முட்டை விலை 15 காசுகள் குறைந்து 4.75 க்கு விற்பனை...!
#IPL 2020: KKR கனவை தடுக்குமா CSK...?
தொடங்கியது பருவமழை! தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!
யாரை வாழ்க்கையில மிஸ் பண்றீங்க .... கண்கலங்கும் போட்டியாளர்கள்!
இந்தியாவில் நேற்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
பிரேசில் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
முதல்முறையாக நீரில் மிதக்கும் விமானம்சேவை அசத்திய ஸ்பைஸ்ஜட்
தமிழக முழுவதும் அரசு அலுவலங்களில் அதிரடி சோதனை..சிக்கிய ₹7லட்சம்...அதிர்ச்சி அதிகாரிகள்
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனாத் தொற்று