மனைவியை கொன்று தற்கொலைக்கு முயற்சித்த கணவன்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகவே உள்ள சிங்காரப்பேட்டை நார்ச்சம்பட்டி

By surya | Published: Mar 01, 2020 09:15 PM

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகவே உள்ள சிங்காரப்பேட்டை நார்ச்சம்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர், சக்திவேல். 38 வயதாகும் இவர், கேரளாவில் ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நதியா (32) என்ற மனைவி, மதன் (9) என்ற மகனும், வைஷ்ணவி (6) என்ற மகளும் உள்ளனர். இவர், கேரளாவில் பணியை முடித்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவரின் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நதியாவிடம் தகராறு செய்வார். அதைப்போலவே, தற்பொழுதும் சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திகுமார், தனது கையில் கத்தியை எடுத்து நதியாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே நதியா உயிரிழக்க, சக்திவேலும் தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரையும் மீட்டனர். நதியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, சக்திகுமாரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கவுள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc