தொலைபேசியில் முத்தலாக் கூறிய கணவர் .! வெளிவிவகார அமைச்சகத்தை நாடிய பெண் .!

தொலைபேசியில் மூன்று தலாக் கூறிய கணவரிடம் முறைப்படி விவகாரத்து வாங்கி தருமாறு வெளிவிவகார அமைச்சகத்திற்கு பெண் கடிதம் எழுதியுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு புதன்கிழமை அன்று கடிதம் ஒன்றை எழுதி இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து தனது 40 வயதான கணவர் போன் வழியாக மூன்று தலாக் கூறி விவகாரத்து செய்ததாக அறிவித்திதாகவும் , அவரிடமிருந்து தனக்கு அதிகாரப்பூர்வமான விவாகரத்து வாங்கி தருமாறும் கூறியுள்ளார் .

அவர் எழுதிய கடிதத்தில், சோமாலியா நாட்டை சேர்ந்த தனது கணவரான அப்தி வாலி அகமது தற்போது அமெரிக்காவின் பாஸ்டனில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதாகவும் , அவரிடம் பேசி தனக்கு அதிகாரப்பூர்வமான விவாகரத்து வாங்கி தருமாறு அமெரிக்காவின் இந்திய தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சர் அறிவுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தில் விரைவில் நீங்கள் தலையிட்டு நீதி கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்ட சபா பாத்திமா எந்தவொரு உண்மையான விவகாரத்து ஆவணங்களும் இல்லாமல் என்னால் மறுமணம் செய்து கொள்ள இயலாது என்று அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அகமது நல்ல பையன் என்று கூறி எனது குடும்பம் 2015-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி என்னை திருமணம் செய்து வைத்தனர். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தன்னை பார்க்க ஹைதராபாத்திற்கு அகமது வருவார் என்றும், அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்ததாகவும் கூறி சபா, கடைசியாக அவர் என்னை இந்தாண்டு பிப்ரவரி மாதம் தான் பார்க்க வந்ததாக கூறினார்.

அதனையடுத்து அமெரிக்காவில் ஓட்டுநராக வேலை கிடைத்த பின்னரும் தன்னுடன் தொடர்பில் இருந்த அவர் தனக்கு பணம் அனுப்பி தந்ததாகவும் பாத்திமா கூறினார் ‌. அதனையடுத்து அக்டோபர் 7-ம் தேதி அகமது எனது தந்தையை தொலைபேசியில் அழைத்து எந்த காரணமும் கூறாமல் மூன்று தலாக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

அதனையடுத்து அவரிடம் நான் பலமுறை கால் செய்து வாக்குவாதம் செய்தேன். இருப்பினும் அவர் காரணத்தை கூறாமல் என்னையும், எனது குடும்பத்தின் எண்களையும் பிளாக் செயதார். அதன்பின் அவரது அம்மா மற்றும் தனது மைத்துனருக்கு கால் செய்ததாகவும், முதலில் நீதி வாங்கி தருவதாக கூறிய அவர்கள் அதன்பின் எங்களது அழைப்பை எடுக்காமல் பிளாக் செய்து விட்டதாக பாத்திமா கூறினார். கடந்த இரண்டு மாதங்களாக அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பயனில்லாததால் வெளிவிவகார அமைச்சகத்தை நாடியதாக கூறினார். எனவே தனக்கு விரைவில் நீதி கிடைக்க உதவ வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.