கஜா புயல் பாதிப்பு ..!திருவாரூர்  மாவட்டத்தில்  புயல் பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு..!

கஜா புயல் பாதிப்பு ..!திருவாரூர்  மாவட்டத்தில்  புயல் பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு..!

திருவாரூர்  மாவட்டத்தில்  புயல் பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது

கஜா புயலால் இதுவரை 4 மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.இதனால் மக்கள் தங்கள் வீடுகள்,வளர்ப்பு பிராணிகளான ஆடுகள்,மாடுகள்,மற்றும் விவசாயம் என அனைத்தையுமே இழந்து நடு வீதி நிற்க வைத்துவிட்டு சென்றுள்ளது.இந்த புயல் ஒருநாளில் வீசிவிட்டு சென்ற இந்த புயலால் 4 மாவட்டங்கள் பல நாட்கள் ஏன் பல வருடங்கள் ஆகும் முழுமையாக முன்னேறி வர.

இந்நிலையில் கடந்த இரு தினங்க்ளுக்கு முன்பு முதல்வர் பிரதமரை சந்தித்து புயல் சேதம் மற்றும் நிவாரணநிதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையோடு அறிக்கை ஒன்றையும் வைத்தார்.இந்நிலையில் தான் நேற்று மத்திய குழு தமிழகம் வந்தது.அது புயல் பாதித்த 4 மாவட்டங்களில் புயல் சேதத்தை பார்விடும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

புயல் சேதத்தை பார்வையிட மத்திய நிதித்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான 7 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் தமிழகம் வந்தது.

அவர்கள் நேற்று முதல் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று  திருவாரூர் மாவட்டத்தில்  முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடை கிராமத்தில் புயல் பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *