மனிதநேயம் மாண்டு போகவில்லை! காக்கைக்கு உணவளித்த காவலர்! குவியும் பாராட்டுக்கள்!

பறவையினங்களிலேயே மக்களோடு மக்களாய் இசைந்து வாழ்கின்ற பறவைகளில் ஒன்று தான் காகம். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  உடல் நிலை பாதிக்கப்பட்டு பறக்க முடியாமல் காக்கை ஒன்று தாவியபடி சுற்றிதிரிந்தது.
இதனையடுத்து, அங்கு காவலர் சந்திரன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த காக்கையை பார்த்த காவலர் சந்திரன், அந்த காக்கைக்கு உணவு மற்றும் தண்ணீர் அளித்து பராமரித்துள்ளார். இதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்தனர். மனிதநேயத்துடன் காக்கைக்கு உதவிய காவலரை, மக்கள் பாராட்டி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.