பருவநிலை மாற்றத்தை சரியாக கையாளுவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்,

பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க கிர்கிஸ்தான் சென்றார்.இன்று அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது.அதில் அவர் பேசுகையில், பொருளாதார வளர்ச்சி காண, அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுடன் வர்த்தக உறவு வலுப்படுத்தப்பட வேண்டும்.

பருவநிலை மாற்றத்தை சரியாக கையாளுவதில் இந்தியா உறுதியாக உள்ளது. மாற்று எரிபொருளை கண்டறிவதில் இந்தியா தீவிரமாக உள்ளது.

இலங்கையில் குண்டுவெடிப்பு நடைபெற்ற தேவாலயத்தை பார்வையிட்ட போது தீவிரவாதத்தின் கோர முகத்தை பார்த்தேன்.தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இணைந்து செயல்பட மனிதாபிமான சக்திகள் முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.