ரஷ்யா கொரோனா தடுப்பூசியின் சோதனை இந்தியாவில் எப்போ தொடக்கம்.?

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி சோதனைகள் அடுத்த வாரம் இந்தியாவில் தொடங்கவுள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக ரஷ்யான தடுப்பூசியான ஸ்பூட்னிக்-வி-யின் தன்னாவலர்கள் சோதனைகள் அடுத்த வாரத்தில் இந்தியாவில் தொடங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

“தன்னாவலர் சோதனைகள் தொடங்குவதற்கு தேவையான அனைத்து தேவைகளும், குறிப்பாக கட்டாய ஒழுங்குமுறை ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளது. இது அடுத்த வாரம் தொடங்க வாய்ப்புள்ளது, ”என்று ஒரு அதிகாரி கூறினார்.

ஸ்பூட்னிக்-வி:

மாஸ்கோவை தளமாகக் கொண்ட கமலேயா நிறுவனம் ஸ்பூட்னிக்-வி கொரோனா உருவாக்கியுள்ளது. இதனை, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்திய பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் ஒரு நாட்டில் அதன் தடுப்பூசி வேட்பாளரின் சோதனைகள் மற்றும் விநியோகத்திற்காக ஒப்பந்தம் செய்திருந்தது.

அந்த வகையில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வேட்பாளருக்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) உடன் இணைந்து மூன்றாம் கட்ட சோதனையை நடத்தி வருகிறது.

கோவாக்சின்:

பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் தடுப்பூசி வேட்பாளரான கோவாக்சினுக்கும் மூன்றாம் கட்ட சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

ZyCovD:

உள்நாட்டு தடுப்பூசியான காடிலா ஹெல்த்கேரின் ‘ZyCovD’ இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment