#BREAKING: மனித உரிமை ஆணைய உத்தரவுகள் அரசை கட்டுப்படுத்தும்- ஐகோர்ட் அதிரடி..!

மனித உரிமை ஆணையம் மனித உரிமை மீறல் குறித்து புகார் அளிக்கப்பட்டதன் பேரிலும், தானாக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்குகளில் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு மனித உரிமை ஆணையம் வழங்குகிறது.

அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பிக்கிறது. இந்நிலையில், மனித உரிமை ஆணைய உத்தரவை எதிர்த்து பல்வேறு அதிகாரிகள் வழக்க்கு தொடர்ந்தனர்.

3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்ட பின்னர், மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகள் அரசை கட்டுப்படுத்தும், மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், மனித உரிமை ஆணையம் பரிந்துரையின் பேரில் பதிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம். பரிந்துரைகளை அரசு அமல்படுத்த தவறினால் மனித உரிமை ஆணையத்தின் நீதிமன்றத்தை அணுகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author avatar
murugan