அட்டகாசமான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி?

அட்டகாசமான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி?

நெத்திலி மீன் மற்ற மீன்களை போல் இல்லாமல், நமது உடலுக்கு ஆரோக்கியம் விளைவிக்கக்கூடிய பல சத்துக்களை கொண்டுள்ளது. இந்த மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கும். இந்த மீனில் ஒமேகா-3 அதிகம் இருப்பதோடு, கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

இந்த மீனை சாப்பிடுவதால், நமது உடலில் ஏற்படக் கூடிய பல நோய்கள் குணமாகிறது. இந்த மீனை சாப்பிடுவதால், இதயம், கண் மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களை குணமாக்குவதுடன், இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது.

இந்த மீனை குழம்பாகவோ, பொரித்தோ நமக்கு விருப்பமான முறைகளில் செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் சுவையான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • நெத்திலி மீன் – ஒரு கப்
  • மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
  • மிளகு தூள் – கால் தேக்கரண்டி
  •  கலவை தூள் (மிளகாய், தனியார், மஞ்சள்) – அரை தேக்கரண்டி
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
  • எலுமிச்சை – பாதி

செய்முறை

முதலில் நெத்திலி மீனை நன்கு சுத்தம் செய்து, நீர் இல்லாமல் வடித்து வைக்க வேண்டும். பின் இதில் மேற்குறிப்பிட்ட எல்லா தூள்களையும் கலந்து, நன்றாக மீனில் படும்படி பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக எலுமிச்சைசாறு கலந்து நன்றாக பிரட்டி, ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைக்க வேண்டும். பின் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான தீயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான நெத்திலி வறுவல் தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.