, ,

மாதவிடாய் காலங்களில் இதுபோல் படுத்துப்பாருங்கள்.., வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் சரியாகும்..!

By

மாதவிடாய் காலங்களில் எப்படி படுத்தால் வயிற்று வலி சரியாகும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

   
   

பொதுவாகவே மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகமான வயிற்று வலி ஏற்படும். இதற்காக சிலர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இதுபோல் மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த வலியை இயற்கையான முறையில் எப்படி தீர்ப்பது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாதவிடாய் காலங்களில் என்னென்ன மாதிரியான உணவுகள் சாப்பிட கூடாது என்பதைப் பற்றியும் இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மாதவிடாய் காலங்களில் அதிகமான இனிப்பு வகைகளை சர்க்கரைகளை சாப்பிடுவதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால், எந்நேரத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பது தெரியாது என்பதால் ஒரு வித பதட்டம், மன பயம் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். மேலும் இந்நேரத்தில் எண்ணெயில் பொரித்து எடுத்த தின்பண்டங்கள் ஆன வடை, பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் போன்றவற்றை தவிர்த்துக் கொள்வது நல்லது. இது போன்ற எண்ணெய் தின்பண்டங்களை சாப்பிடுவதனால் கெட்ட கொழுப்புக்கள் அதிகரித்து வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்றவை நிகழும். மேலும் முதுகு வலியும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதனால் எண்ணெய் தின்பண்டங்களை சாப்பிடுவதன் மூலம் உங்களது வயிற்று வலி கூடுமே தவிர எந்த தொந்தரவும் குறையவே குறையாது. மேலும் டீ, காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் இந்த சமயத்தில் அவற்றை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால், காபி எடுத்துக் கொள்வதால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். இதனையடுத்து கால்சியம், கொழுப்பு சத்து நிறைந்து இருக்கக்கூடிய பால் மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இதனை அதிகமாக எடுத்துக்கொள்வதால் உடலில் சோர்வு ஏற்படும். உடல்வலி, மார்பகங்களில் வலி போன்றவை ஏற்படக்கூடும்.

மேலும், இந்த நேரத்தில் தேவையில்லாமல் அதிகமாக யோசித்து அழுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் உங்களது வயிற்று வலி அதிகரிக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை மிக எளிமையாக வீட்டில் இதுபோன்ற நிலையில் படுத்தால் உங்களுக்கு நிச்சயமாக பத்து நிமிடங்களில் வலி ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது. எந்நேரத்தில் எப்படி படுக்க வேண்டும் என்றால் முதலில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு உங்களது இரு கால்களையும் எதிர்ப்புறமாக இருக்கக்கூடிய சுவற்றின் மேல் உயரமாக வைத்துக் கொள்ள வேண்டும். தலைக்கு சிறியதாக தலையணை இருந்தால் வைத்துக்கொள்ளலாம்.

இல்லை என்றால் வைக்காமல் மட்டமாக படுத்துக் கொண்டாலும் சிறந்தது. இது போன்ற நிலையில் நீங்கள் படுத்து இருப்பதனால் உங்களது வலி 10 நிமிடங்களுக்கு பிறகு குறைவதை நீங்கள் உணர முடியும். மேலும் இந்த நேரத்தில் உங்களுக்குப் பிடித்த இனிமையான பாடல்களை கேட்பதும், நன்கு ஓய்வு எடுப்பதும் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேற்சொன்னபடி, காலை உயரமாக வைத்து படுப்பதன் மூலமாக உங்களது வயிற்றில் ஏற்படக்கூடிய அழுத்தம் குறைந்து இடுப்பு வலி, வயிற்று வலி நீங்கும். இதனால் உங்களுக்கு நிம்மதியான தூக்கம் இரவில் கிட்டும்.

Dinasuvadu Media @2023