சர்க்கரை நோயாளிகள் கால்களில் ஏற்படும் புண்களை எவ்வாறு தடுப்பது!

கால்களில் ஏற்படும் புண்களை தடுக்கும் வழிமுறைகள் :

கால்களில் ஏற்படும் புண்களை எவ்வாறு தடுக்கலாம்,குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் காலில் புண்கள் வராமல் எவ்வாறு தடுக்கலாம்.ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் காலில் புண்கள் ஏற்பட்டால் புண்கள் ஆறுவதற்கு நீண்ட நாள்கள் எடுக்கும்.

குறிப்பாக நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் கால்களில் உணர்ச்சியின்மை,இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ,சரியான காலணிகள் இல்லாதிருப்பது ,காலணிகள் இல்லாமல் நடப்பது போன்ற காரணங்களால் கால்களில் புண்கள் ஏற்படுகின்றன.

இதன் காரணமாக பல நேரங்களில் விரல்களில் புண்கள் ,காலையே இழக்கும் நிலை போன்றவைகள் ஏற்படுகின்றன.இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பின்வருமாறு காணலாம்.

புண்கள் ஏற்படாதவாறு தடுத்தல் :

  • எங்கு நடந்தாலும் காலனியை அணிந்து கொண்டு நடக்க வேண்டும்.சர்க்கரை நோயாளிகள் தங்களுக்காக தயாரிக்கப்பட்ட மென்மையான காலணிகளை பயன்படுத்த வேண்டும்.
  • தினமும் கால்களை நன்கு கழுவ வேண்டும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளைவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
  • சிறிய காயங்கள் அல்லது பொக்களங்கள் எதுவும் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.இவ்வாறு செய்வதால் புண்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

புண்களை சரி செய்தல் :

  • புண்கள் ஆழமாக இருந்தால் அல்லது ஆழமாக எலும்பு ,தசை பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தால் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் சரி செய்யலாம்.
  • புண்கள் சிறிதாக ஆழமில்லாமல் இருந்தால் மருந்து கொண்டு கட்டுப்போட்டு குணப்படுத்தலாம்.
  • சர்க்கரை நோயாளிகள் உடலில் கருப்பாகிவிட்ட விரல்கள் அல்லது பாதத்தின் பகுதிகளை அறுவை சிகிச்சை செய்து சரிசெய்யலாம்.