அசத்தலான புதினா ஆம்லெட் செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுகிறோம். அதிலும், அசைவா உணவுகளான மீன், முட்டை மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை நாம் வித்தியசாமாக செய்து சாப்பிடுகிறோம்.

தற்போது இந்த பதிவில் அசத்தலான புதினா ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • முட்டை – 2
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • உப்பு – தேவையான அளவு
  • புதினா – தேவையான அளவு
  • கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
  • சோடா – ஒரு துளி
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் புதினா இலைகளை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். அதில் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.

பின் தவாவை அடுப்பில் வைத்து அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளை தூவ வேண்டும். பின் ஆம்லேட்டை திருப்பி போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது  சுவையான புதினா ஆம்லெட் தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.