சுவையான சிக்கன் தோசை செய்வது எப்படி?

சுவையான சிக்கன் தோசை செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை விரும்பி உண்ணுகின்றோம். அதில் காலையில் நாம் அதிகமாக தோசை, இட்லி போன்ற உணவுகளை தான் விரும்பி உண்பது உண்டு.

தற்போது, இந்த பதிவில் சுவையான சிக்கன் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கோழிக்கறி – 200 கிராம்
  • மைதா மாவு – 250 கிராம்
  •  தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 5
  • இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • காரட் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் கோழிக்கறியை எலும்பில்லாமல் தேர்வு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும். அதனுடன் மைதா, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், காரட் துருவல், உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.

பின் தோசை கல்லை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு மாவை ஊற்ற வேண்டும். தோசையின் மேல் பக்கத்திலும் சிறிது எண்ணெய் ஊற்றி, நன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு, இரண்டு பக்கமும் நன்றாக வெந்தவுடன் இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான சிக்கன் தோசை தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube