அசத்தலான பாசிபருப்பு தோசை செய்வது எப்படி?

சத்தான சுவையான பாசிப்பருப்பு தோசை செய்வது எப்படி என்று  பார்ப்போம்.

நாம் நமது வீடுகளில் காலையில், தோசை மற்றும் இட்லி போன்ற உணவுகளை தான்  சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான சுவையான பாசிப்பருப்பு தோசை செய்வது எப்படி என்று  பார்ப்போம்.

தேவையானவை

  • பாசிப்பருப்பு – கால் கிலோ
  • பச்சரிசி – கால் கப்
  • பெருங்காயம் – 3 சிட்டிகை
  • காய்ந்த மிளகாய் – 3
  • உப்பு – தேவைக்கேற்ப
  • தேங்காய் துருவல் – கால் கப்
  • சின்ன வெங்காயம் – 10
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  •  கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
  • எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பருப்பு மற்றும் பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனுடன் பெருங்காயம், உப்பு, மிளகாய், தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து தோசை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்து வைத்துள்ள மாவுடன் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தழையை சேர்க்க வேண்டும். பின் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானது ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை போல் மெல்லியதாக பரப்பி, எண்ணெய் விட்டு சிவந்து வந்தவுடன் எடுத்துவிட வேண்டும். இப்போது சுவையான பாசிபருப்பு தோசை தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.