அசத்தலான மீன் ஊறுகாய் செய்வது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீனை விரும்பி சாயிடுவதுண்டு. மீனை பொரித்தோ அல்லது குழம்பு வைத்தோ சாப்பிடுவதுண்டு. ஆனால், நம்மில் அதிகமானோர் மீன் ஊறுகாய் சாப்பிட்டு இருக்க மாட்டோம்.

தற்போது இந்த பதிவில் சுவையான மீன் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • மீன் (முள் நீக்கியது) – 1 கிலோ
  • இஞ்சி – 125 கிராம்
  • பூண்டு – 125 கிராம்
  • கடுகு – 60 கிராம்
  • மஞ்சள் தூள் – 1 மேஜைக்கரண்டி
  • சர்க்கரை – 1 கோப்பை
  • வினிகர் – 400 கிராம்
  • மிளகாய் வற்றல் – 60 கிராம்
  • சீரகம் – 35 கிராம்
  • உப்பு – 2 மேஜைக்கரண்டி
  • கடலை எண்ணெய் – அரை லிட்டர்
  • மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி

செய்முறை

முதலில் மீனை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் மீனில் உப்பு, மிளகாய் தூள் தடவி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன், மீனை அதில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.

அதன்பின், இஞ்சி, காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் எண்ணெயை சூடாக்கி அரைத்த மசாலாவை நன்றாக வதக்க வேண்டும். பின் அதனுள் மீன், வினிகர், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை சமைக்க வேண்டும். இப்போது சுவையான மீன் ஊறுகாய் தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.