கல்யாணத்தில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு மசாலா சுவையாக செய்வது எப்படி?

கல்யாணத்தில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு மசாலா சுவையாக செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளலாம்.

கல்யாண பந்தியில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு மசாலாவிற்கு என்று தனி பிரியர்கள் இருப்பார்கள். அந்த வகையில் இதனை எவ்வாறு சுவையாக சமைப்பதென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 3, பச்சை பட்டாணி – 150 கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 2, எண்ணெய் – 4 ஸ்பூன், சோம்பு – 1 1/2 ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 2, கடுகு – 1/2 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன், தனியா தூள் – 1/2 ஸ்பூன், தேங்காய் – 2 சில்லு, கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை நன்றாக சிறு துண்டுகளாக்கி அதனுடன் பச்சை பட்டாணி சேர்த்து, 1/2 ஸ்பூன் உப்பு, 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வைக்க வேண்டும். மிக்சி ஜாரில் தேங்காய் மற்றும் 1 ஸ்பூன் சோம்பு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் கடாய் வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கடுகு, சோம்பு, பட்டை சேர்த்து தாளித்து அதில் வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் இதில் தக்காளியை சேர்த்து கொள்ளுங்கள். தக்காளி வதங்கிய பின்னர் மிளகாய் தூள், தனியா தூள், அரைத்து வைத்த பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு இதனுடன் உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி விடலாம். சுவையான கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மசாலா ரெடி.