அசத்தலான மசாலா பூரி செய்வது எப்படி?

நாம் காலையில் இட்லி, தோசை, பூரி போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மசாலா பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கடலை மாவு – ஒரு கப்
  • கோதுமை மாவு – ஒரு கப்
  • தயிர் – அரை கப்
  • மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
  • ஓமம் – அரை தேக்கரண்டி
  • சீரகம் – ஒரு தேக்கரண்டி
  • பெருஞ்சீரகம் – அரை தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும்.

இந்த மாவுக் கலவையுடன் தயிர் சேர்த்து கிளறவேண்டும். அதனுடன் சிறிது எண்ணெய் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவாக பிசைந்து வைத்து மாவிலிருந்து சிறு உருண்டை அளவு மாவு எடுத்து, தட்டி வாணலியில் எண்ணெய் ஊற்றி பூரியை பொரித்தெடுக்க வேண்டும். இப்போது சுவையான மசாலா பூரி தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.