தலை முடி நீளமாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறை!

தலை முடி நீளமாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறை!

பெண்கள் முக அழகை எவ்வாறு விரும்புகிறார்களோ அதே போல தலை முடியும் அடர்த்தியாக வளர வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்கான ஒரு எண்ணெய் தயாரிக்கும் முறை குறித்து தற்போது பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணை – ஒரு லிட்டர்
  • விளக்கெண்ணைய் – கால் லிட்டர்
  • வசம்பு பொடி – 5 கிராம்
  • கரிசலாங்கண்ணி பொடி – 5 கிராம்
  • நெல்லிக்காய் பொடி – 5 கிராம்
  • கருவேப்பிலை பொடி – 5 கிராம்
  • மருதாணி பொடி – 5 கிராம்
  • அரோமா ஆயில் – 2 சொட்டு
  • காட்டன் துணி

செய்முறை

முதலில் தேங்காய் எண்ணை ஒரு லிட்டரையும் கால் லிட்டர் விளக்கெண்ணெயையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். அதன்பின் வசம்பு பொடி, கரிசலாங்கண்ணி பொடி, நெல்லிக்காய் பொடி, கருவேப்பிலை பொடி மருதாணி பொடி ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொண்டு காட்டன் துணியில் இவை அனைத்தையும் தனி தனியாக கட்டி விடவும்.

பின் இந்த தனித்தனியாக கட்டப்பட்ட பொட்டலங்களை தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலவையில் சேர்த்து ஒரு வாரம் கழித்து எடுத்து பயன்படுத்தவும். ஒரு வாரம் கழித்து பயன்படுத்தும் பொழுது அதில் இரண்டு சொட்டு அரிமா ஆயில் சேர்த்துக் கொள்ளவும். பின் மிதமாக சூடுபடுத்தி தலையில் பெரிய பல் உள்ள சீப் வைத்து சீவி வர முடி அடர்த்தியாக வளர்வதுடன் முடி உதிர்வு நின்று விடும்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube