மூன்றே பொருட்களில் மும்பை கராச்சி அல்வா செய்வது எப்படி!

மூன்றே பொருட்களில் மும்பை கராச்சி அல்வா செய்வது எப்படி!

வீட்டிலுள்ள முக்கியமான மூன்று பொருட்களை மட்டும் வைத்து அட்டகாசமான சுவையுடன் இனிப்பான மும்பை கராச்சி அல்வா செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். 

தேவையான பொருட்கள்

  • கான்ஃப்ளர் மாவு
  • சர்க்கரை
  • நெய்
  • ஏலக்காய்
  • உப்பு
  • முந்திரி

செய்முறை

முதலில் கான்ஃப்ளர் மாவை தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கலந்து வைத்துக்கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியில் சர்க்கரை சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி கரைய  விடவும். அதிகமான பாகு பதம் தேவையில்லை குலாப் ஜாமூனுக்கு செய்வது போல லேசான பிசுபிசுப்பு தன்மை வந்தால் போதும். அதனுடன் லேசாக ஏலக்காய் தூள் மற்றும் உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து கொள்ளவும்.

அதன் பின் அந்த பாகு கலவையில் கரைத்து வைத்துள்ள கான்ஃப்ளர் மாவு கரைசலை சேர்த்து கையை எடுக்காமல் 7 நிமிடங்கள் கிண்டவும். லேசாக நெய் சேர்த்து கிளறவும். பின்பு ஆரஞ்சு நிற புட் கலர் சேர்த்து கொள்ளவும். நன்றாக கிளறியதும் சட்டியில் ஓட்டாத பதம் வருகையில், முந்திரி அல்லது பாதம் போட்டு கிளறி ஒரு தட்டில் எண்ணெய் பூசி அதில் ஊற்றி 2 மணி நேரங்கள் வைத்திருந்து வெட்டி எடுத்தால் அட்டகாசமான அல்வா தயார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube