வீட்டிலே செய்யலாம் கார்ன் சீஸ் டோஸ்ட் .!

கார்ன் சீஸ் டோஸ்ட்:

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் கார்ன். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. எனவே மாலையில் பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சீஸ் மற்றும் கார்னைக் கொண்டு அற்புதமான சுவையில் டோஸ்ட் செய்து கொடுங்கள்.

இதனால், அவர்களது பசி அடங்குவதோடு, அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு கார்ன் சீஸ் டோஸ்ட்டை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பிரட் – 5 துண்டுகள்

வெங்காயம் – 2 கப் (நறுக்கியது)

குடைமிளகாய் – 1 (நறுக்கியது)

வேக வைத்த ஸ்வீட் கார்ன் – 1 கப்

துருவிய சீஸ் – 1/2 கப்

மிளகுத் தூள் – 1/4டீஸ்பூன்

வெண்ணெய் – 1 ஸ்பூன்

மைதா – 2 டீஸ்பூன்

சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பிரேட் துண்டுகளை வெண்ணெய் தடவி ஒரு கடாயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கவும். பின், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி மேலும்  குடைமிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர், அதில் வேக வைத்த ஸ்வீட் கார்ன் சேர்த்து நன்கு கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், மைதா சேர்த்து சில நொடிகள் கிளறி, பின் பால் ஊற்றி நன்கு சாஸ் போன்று ஓரளவு கெட்டியான பின் அதில் காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக சீஸ் சேர்த்து உருக வைக்கவும். அடுத்து பிரட் துண்டுகளை நெய் தடவி தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து கொள்ளவும். இறுதியில் ஒவ்வொரு பிரட் பிரட் துண்டுகளின் ஒரு பக்கத்திலும், கார்ன் கலவையைப் பரப்பி பரிமாறினால் கார்ன் சீஸ் டோஸ்ட் ரெடி…..

கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Recent Posts

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

6 hours ago

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

9 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

11 hours ago

கமலஹாசன் காசு கேட்டும் குடுக்கல ..!! வேதனையில் உண்மை உடைத்த பிரபலம் !!

Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…

11 hours ago

முகத்தில் பளபளப்பு கூட வீட்டிலேயே கிரீம் தயார் செய்யலாம்… செய்முறை இதோ….

Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…

11 hours ago

சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

12 hours ago