ஆரோக்கியமான காலிஃப்ளவர் புதினா ரைஸ் எப்படி செய்வது …?

மதிய நேரத்தில் குழம்புகள் எதையாவது வைப்பதற்கு நேரமில்லை என்று வருத்தப்பட வேண்டாம். நாம் வித்தியாசமான சாதங்கள் ஏதாவது செய்தால் நிச்சயம் விரைவாக செய்து முடித்து விட முடியும். இன்று ஆரோக்கியமான காலிஃப்ளவர் புதினா ரைஸ் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • காலிஃப்ளவர்
  • பச்சை மிளகாய்
  • புதினா
  • நெய்
  • உப்பு
  • எண்ணெய்
  • இஞ்சி பூண்டு விழுது
  • பெரிய வெங்காயம்

செய்முறை

வேக வைத்தல் : முதலில் காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு உப்பு சேர்த்து வெந்நீரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

விழுது : அதன் பின் புதினா மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் தண்ணீர் தெளித்து விழுது போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சாதம் : இறுதியாக வாணலியில் எண்ணெய் மற்றும் சிறிதளவு நெய்யை ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை நீங்கியதும் அரைத்த விழுது மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து நன்கு வேகவிடவும். இவை நன்கு வெந்ததும் இறக்கி விடவும். அவ்வளவு தான் இதனுடன் சாதத்தை போட்டு கிளறினால் அட்டகாசமான காலிஃப்ளவர் புதினா சாதம் வீட்டிலேயே தயார். நிச்சயம் ஒருநாள் செய்து பாருங்கள், வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

author avatar
Rebekal