அசத்தலான சிக்கன் லெக் பீஸ் ஃப்ரை செய்வது எப்படி?

நாம் நமது னறாட வாழ்வில் பல வகையான உணவுகளை விரும்பி உண்கிறோம். அந்த வகையில், அசைவ உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பதுண்டு. அதிலும் சிக்கன் சம்பந்தமான உணவுகளை அனைவரும் விரும்பி உண்பதுண்டு.

தற்போது இந்த பதிவில், சுவையான லெக் பீஸ் ஃப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • சிக்கன் லெக் பீஸ் – அரை கிலோ
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
  • தயிர் – கால் கப்
  •  மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
  • மிளகாய்பொடி – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
  •  உப்பு – தேவைக்கேற்ப
  • ஆரஞ்ச் கலர் பொடி – கால் சிட்டிகை
  • எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

இறைச்சி  கடையில்,அரை கிலோ லெக் பீஸ் தனியாக கேட்டு  வாங்க வேண்டும். அதை வாங்கி வந்து நன்றாக கழுவி சுத்தம் செய்துக்க கொள்ள வேண்டும். அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தயிர்,கலர்பொடி, உப்பு போன்றவற்றை போட்டு நன்கு கலந்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த உடன் லெக் பீஸ்ஸை போட்டு பொரித்தெடுக்க வேண்டும். தயிர் சேர்த்து இருப்பதால், சிக்கன் கடாயில் ஒட்டிக் கொள்ளும். எனவே, சிக்கனை திருப்பி, திருப்பி போட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான சிக்கன் லெக் பீஸ் ஃப்ரை தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.