சுவையான உருளைக்கிழங்கு மசாலா போளி செய்வது எப்படி.?

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மசாலா போளி எப்படி செய்து கொடுக்கலாம் என்று பார்ப்போம்.

மாலை நேரங்களில் குழந்தைகள் ஸ்நாக்ஸ் சாப்பிடுவார்கள்.அவர்களுக்கு எளிதாக வீட்டிலையே சில நிமிடங்களில் எப்படி ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று பலருக்கு தெரியாது.அவர்களுக்காக இன்று மாலை நேர ஸ்நாக்ஸான உருளைக்கிழங்கு மசாலா போளி 5நிமிடங்களில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • உருளைக்கிழங்கு – 4
  • கடலை பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி
  • முந்திரி பருப்பு – எட்டு
  • மைதா மாவு – இரண்டு கப்
  • பச்சை மிளகாய் – ஒன்று
  • உளுத்தம் பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி
  • கடுகு – ஒரு டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – இரண்டு மேஜைக்கரண்டி
  • உப்பு – தேவைகேற்ப
  • நெய் – தேவையான அளவு
  • கறிவேப்பில்லை,கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

உருளைக்கிழங்கை வேகவைத்து விட்டு மசித்து வைத்து கொள்ளுங்கள்.
பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை ஆகிய மூன்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றிய பின்னர் அது சூடானதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

அந்த கலவையில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்கவும்.அடுத்து மைதா மாவு, உப்பு, சிறிதளவு எண்ணெய், தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து சற்று தளர்வான சப்பாத்தி மாவு போன்று ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

பின் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
அதன் பின் ஒரு உருண்டை மாவை எடுத்து அதை வாழை இலையில் வைத்து தட்டி விட்டு,அதன் நடுவில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் எண்ணெயில் போட்டு வதக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி உள்ளிட்டவை சேர்த்து கலந்து வைத்துள்ளதை அதில் வைத்து மூடி மெல்லியதாக தட்டிக்கொள்ளவும்.

பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ,முன்பே தட்டி வைத்த போளியை தோசை கல்லில் போட்டு,அதை சுற்றி நெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.தற்போது சுவையான உருளைக்கிழங்கு மசாலா போளி தயார்.

Leave a Comment