சுவையான திணை பக்கோடா செய்வது எப்படி?

நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் அருந்துவது வழக்கம். ஆனால், அந்த தேநீரை வெறுமையாக அருந்துவதில்லை. அதனுடன் சேர்த்து நமக்கு பிடித்தமான உணவுகளை செய்தோ அல்லது வாங்கியோ சாப்பிடுகிறோம். அதிலும், நாமே செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

தற்போது இந்த பதிவில், சுவையான திணை பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • திணை மாவு – கால் கிலோ
  • கடலை மாவு – 100 கிராம்
  • பெரிய வெங்காயம் – 4
  • இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி இல்லை – 1 கைப்பிடி
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் திணை மாவு, கடலை மாவு ஆகியவற்றை கட்டிகள் இல்லாமல் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி விழுது, மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள பக்கோடா மாவை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான திணை பக்கோடா தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.