சுவையான பூண்டு தோசை செய்வது எப்படி ?

சுவையான பூண்டு தோசை செய்யும் முறை.  நாம் தினமும் காலையில் விதவிதமான உணவுகளை

By leena | Published: May 27, 2020 09:07 AM

சுவையான பூண்டு தோசை செய்யும் முறை. 

நாம் தினமும் காலையில் விதவிதமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அனால், நம்மில் அதிகமானோர் காலியில், இட்லி, தோசை போன்ற உணவுகளை தன விரும்பி சாப்பிடுவதுண்டு. தாற்போது இந்த பதிவில் சுவையான பூண்டு தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • இட்லி மாவு - ஒரு கப் 
  • பூண்டு - 25 பல் 
  • இட்லி மிளகாய் பொடி - 2 மேசைக்கரண்டி 
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி 

செய்முறை 

முதலில் பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தோசைக்கல்லில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டை போட்டு வதக்க வேண்டும். 

பின் பூண்டை 2 நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட்டு ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி அளவு தோசை மாவை எடுத்து, தோசை ஊற்றி, அதன் மேலே இட்லி மிளகாய் பொடி தூவி, அதன் மேல் வதக்கி வைத்திருக்கும் பூண்டை தூவ வேண்டும். 

பின் அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, தோசை கரண்டியை வைத்து ஒரு முறை தோசையின் மீது அழுத்தி விட வேண்டும். இப்படி செய்தால் தோசையை திருப்பி போடும் போது பூண்டு கீழே விழாமல் இருக்கும். பின் இருபுறமும் நன்கு வெந்தவுடன் எடுத்து பரிமாற வேண்டும். இப்போது சுவையான பூண்டு தோசை தயார். 

Step2: Place in ads Display sections

unicc