வீட்டிலேயே சேமியாவை வைத்து அட்டகாசமான உணவு தயாரிப்பது எப்படி?

சேமியாவை வைத்து சாதாரணமாக தாளித்து சேமியாவை அவித்து உண்பதை விட காய்கறிகளுடன் எப்படி சேமியாவை சுவையான முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • சேமியா
  • பீன்ஸ்
  • கேரட்
  • உருளைக்கிழங்கு
  • வெங்காயம்
  • பச்சைமிளகாய்
  • உப்பு
  • எண்ணெய்
  • கடுகு
  • கருவேப்பிலை
  • தக்காளி

செய்முறை

முதலில் சேமியாவை வடித்து லேசாக உலரவிட்டு வைத்துக்கொள்ளவும். அதன் பின்பும் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை சேர்த்து நன்றாக கிளறவும். வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும், அதன் பின் நாம் ஏற்கனவே வெட்டி வைத்துள்ள கேரட் பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளை நன்றாக வதக்கி அவிய விடவும்.

நன்கு அவிந்ததும் தேவையான அளவு மசாலாத்தூள் உப்பு ஆகியவை சேர்த்து கிளறி தண்ணீர் தேவையான அளவுக்கு ஊற்றி, லேசாக கொதிக்கவிடவும், கொதி வந்ததும் வடித்து வைத்துள்ள சேமியாவை போட்டு கிளறி இறக்கினால் அட்டகாசமான காய்கறி சேமியா வீட்டிலேயே தயார்.

author avatar
Rebekal