சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி? வாருங்கள் பார்ப்போம்!

சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி? வாருங்கள் பார்ப்போம்!

மீன் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்த மீனை எவ்வாறு சுவையான முறையில் சமையல் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கடுகு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • வெந்தயம்
  • வெங்காயம்
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • மிளகாய்த்தூள்
  • கழுவிய மீன்
  • மஞ்சள் தூள்
  • பெருங்காயம் பொடி
  • தேங்காய்ப்பால்
  • உப்பு

செய்முறை

முதலில் தேங்காய் பாலுடன் மிளகாய் தூளை நன்றாக கலந்து அதில் கழுவி வைத்துள்ள மீனை போட்டு வைக்கவு. பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு, வெந்தயம் சேர்த்து வதக்கவும், பின் வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

வதங்கியதும் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பின்  ஏற்கனவே எடுத்து வைத்துள்ள தேங்காய்ப் பால் மீன் கலவையை அதனுடன் ஊற்றி கிளறி விட்டு மூடி வைக்கவும். கொதித்தவுடன் இறக்கினால் அட்டகாசமான மீன் குழம்பு தயார். தேவைப்பட்டால் பெருங்காயம் கலந்து கொள்வது நல்லது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube