சுவையான கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி?

சுவையான கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்துகிறோம். நமது சமையலில் காய்கறி என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. விதவிதமான காய்கறிகளில் பல வகையான உணவுகளை தயாரிக்கிறோம்.

தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கத்தரிக்காய் – 3
  • உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 5
  • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
  • புளி – எலுமிச்சை அளவு
  • உப்பு – தேவைக்கேற்ப
  • கடலை எண்ணெய் – தேவைக்கேற்ப
  • விளக்கெண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

கத்தரிக்காயில் விளக்கெண்ணெய் தடவி சுட வேண்டும். கத்தரிக்காய் ஆறியவுடன் தோலுரித்து மசிக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். பின்  வருத்தவற்றை பொடி செய்து கொள்ள வேண்டும்.

அதன்பின் புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மசித்த கத்தரிக்காயை போட்டு நன்கு கடைய வேண்டும். இப்பொது சுவையான கத்தரிக்காய் சட்னி தயார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube