சுவையான தேங்காய் ரசம் செய்வது எப்படி?

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் முக்கியமான இடத்தை பெறுவது ரசம். இந்த ரசத்தில் பல வகையான ரசங்கள் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ணுகின்ற உணவு வகைகளில் ரசமும் ஒன்று.

தற்போது இந்த பதிவில், சுவையான தேங்காய் ரசம் வைப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • தேங்காய் துருவல் – 1 கப்
  • பூண்டு – 5
  • தக்காளி விழுது – 1/2 கப்
  • பச்சை மிளகாய் – 3
  • மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – 1 கைப்பிடி
  • உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு

  • நெய் – 1
  • சீரகம், கடுகு – சிறிதளவு
  • மெலிதாக சீவிய பூண்டு – 2
  • கறிவேப்பிலை – தேவையான அளவு

( சீரகம், கடுகு, பூண்டு மற்றும் கறிவேப்பிலையை நெய்யில் வதக்க வேண்டும்)

செய்முறை

முதலில் தக்காளியை சூடு நீரில் வைத்து, 10 நிமிடம் கழித்து, மேல் தோல் நீக்கி விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் தக்காளி விழுது சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் அதில் அரைத்த தேங்காய் விழுது, உப்பு, மிளகு தூள், மல்லித்தூள் போட்டு லேசாக கொதிக்க விட வேண்டும். அது நுரைத்து வந்தவுடன் நெய்யில் தாளித்ததை ரசத்தில் சேர்க்க வேண்டும். இப்போது சுவையான தேங்காய் ரசம் தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.