சுவையான வாழைப்பழ கேக் வீட்டிலேயே செய்வது எப்படி ?

வீட்டிலேயே சுவையான வாழைப்பழ கேக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • மைதா மாவு சர்க்கரை பவுடர்
  • வெண்ணெய்
  • வாழைப்பழம்
  • வாழைப்பழம் & வெனிலா எசன்ஸ்
  • உலர்திராட்சை
  • பேக்கிங் பவுடர்
  • ஆப்ப சோடா
  • முட்டை

செய்முறை

முதலில் மைதா மாவை நன்றாக சல்லடையில் சலித்து, அதனுடன் ஆப்ப சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக நுரை வர அடித்து வைத்துக் கொள்ளவும். பின் மைதாவில் வெண்ணை கலவை மற்றும் முட்டையை சேர்த்து, ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள வாழைப்பழம் ஆகியவற்றை கலந்து நன்றாக கலக்கவும்.
அதன் பின்பு அதில் உளர் திராட்சை முந்திரி மற்றும் எசன்ஸ் இரண்டையும் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும். பின் பட்டர் பேப்பரை எடுத்து அதில் வெண்ணெயைத் தடவி நாம் எந்த சட்டியில் ஊற்ற போகிறோமோ அதில் இந்த கலவையை ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் வைக்கும் பொழுது மென்மையாகவும் கருகாமல் வரும். பின் ஒரு மணி நேரம் வேக வைத்து எடுத்தால் அட்டகாசமான வாழைப்பழ கேக் வீட்டிலேயே தயார்.
author avatar
Rebekal