வாயில் வைத்தால் கசப்பே தெரியாத பாகற்காய் தொக்கு எப்படி செய்வது?

பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது, அதற்கு காரணம் அதன் சுவை தான். ஆனால், அதன் கசப்பு தன்மையே தெரியாமல் அட்டகாசமான பாகற்காய் தொக்கு செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • பாகற்காய்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • வெந்தய தூள்
  • புளி
  • வெல்லம்

செய்முறை

முதலில் பாகற்காயை லேசாக உப்பு சேர்த்து வேக வைத்துவிட்டு, அந்த நீரை வடித்து விடவும். அதன் பின் அதனுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கிளறி ஒரு நாள் முழுவதும் காய வைத்து எடுத்து கொள்ளவும். இதனை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். அதன் பின்பதாக ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பில்லை, சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

பின் உப்பு சேர்த்து பாகற்காய் நன்கு வாதங்கவிடவும். அதற்குள் மற்றொரு சட்டியில் புளியை கட்டியான கரைசலாக எடுத்துக்கொண்டு, அதில் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, வெந்தய தூள் ஆகியவை சேர்த்து நன்கு வற்ற விடவும். பின் பாகற்காய் விதைகளில் இந்த புளி கரைசலை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கினால் அட்டகாசமான பாகற்காய் தொக்கு தயார்.

author avatar
Rebekal