காலை உணவுக்கு ஏற்ற சுவையான பொங்கனம் செய்வது எப்படி …?

காலையில் வழக்கமாக செய்து சாப்பிடுவது தோசை அல்லது இட்லி தான். அல்லாவிட்டால் சிலர் பூரி மற்றும் சப்பாத்தி செய்து சாப்பிடுவார்கள். ஆனால் கேட்பதற்கும், சுவைப்பதற்கு வித்தியாசமானதாக இருக்கும் பொங்கனம் எப்படி செய்வது என இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • இட்லி மாவு
  • கடலை பருப்பு
  • உளுந்தம் பருப்பு
  • உப்பு
  • எண்ணெய்
  • காய்ந்த மிளகாய்
  • ரவை
  • கடுகு
  • மைதா
  • கருவேப்பில்லை
  • தயிர்

செய்முறை

ஊற வைக்க : முதலில் ஒரு கிண்ணத்தில் ரவை, மைதா, தயிர் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து இவற்றை 10 நிமிடம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.

தாளிக்க : அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதனுடன் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

கலவை : அதன் பின் எடுத்து வைத்துள்ள இட்லி மாவுடன், ஊற வைத்து ரவை மைதா கலவையை கலந்து, தாளித்து எடுத்துள்ளவற்றையும் இதனுடன் கலந்து கொள்ளவும். இந்த மாவு கலவைக்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொள்ளவும்.

தோசை : தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், நாம் கலந்து வைத்துள்ள தோசை மாவை ஊற்றி இரு புறமும் வேக வைத்து எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் அட்டகாசமான பொங்கனம் தயார்.

author avatar
Rebekal