நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்? ஸ்டாலின் முதலமைச்சருக்கு கேள்வி

நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்?  என்று ஸ்டாலின் முதலமைச்சருக்கு

By venu | Published: Jul 01, 2020 07:29 AM

நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்?  என்று ஸ்டாலின் முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,முதலமைச்சர் நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள். சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதமான முதன்மை ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளது.இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்?

காவல்துறைத் தலைமையாக, இருக்கும் முதலமைச்சர் இவ்வழக்கில் உள்ள ஆதாரங்களை சேதப்படுத்தாமல் இருக்கவும்,விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிறீர்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படி செயல்படும்போது நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc