அரசு பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு தெரியுமா?

அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளதால், இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 11-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.

இந்தநிலையில், இந்தநிலையில், அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சென்னை மாநகரை தனித்தன்மை வாய்ந்த நகரமாக மாற்றுவதற்கு 3,140 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்