400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படத்திற்காக பிரபாஸ் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா .?

400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படத்திற்காக பிரபாஸ் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா .?

400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படத்திற்காக பிரபாஸ் 70கோடியும், தீபிகா படுகோனே 18 கோடியும் சம்பளம் வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் ஊரடங்கு முடிந்ததும் ராதே ஷியாம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அதனையடுத்து 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அதாவது அந்த பிரபாஸ் 21 ஒரு கற்பனையான மூன்றாம் உலகப் போரை அடிப்படையாக கொண்டது என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார்.பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை நாக் அர்ஜுன் இயக்குகிறார். இவர் கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம் படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்திற்காக பிரபாஸ் 70 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாகவும், தீபிகா படுகோனே சம்பளமாக ரூ. 18 கோடி வாங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.