எத்தனை திருமணம் நான் பண்றது.?- ரசிகர் கேள்விக்கு சந்தானம் பதில்.!

ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகர் சந்தானம் நக்கலாக பதிலளித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது சபாபதி மற்றும் மேலும் பெயரிடாத ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.  இவரது நடிப்பில் டிக்கிலோனா திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நடிகர் சந்தானம் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் திருமணம் எப்போ தலைவா.? என கேட்டுள்ளார். அதற்கு சந்தானம் ” எத்தனை திருமணம் நான் பண்றது . எனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது.” என நக்கலாக பதிலளித்துள்ளார்.  நடிகர் சந்தானத்திற்கு கடந்த 2004 – ஆம் ஆண்டு உஷா என்பவருடன் திருமணம் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.