நமது இதயம் ஆரோக்கியமாக இருக்க இத்தனை மணிநேரம் உறக்கம் அவசியம் !

நமது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தூக்கம் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது.அந்தவகையில் நாம் தூங்கும் நேரத்தை குறைத்து கொண்டால் அது நமது உடலில் பலவிதமான நோய்களையும் ஏற்படுத்தி நமது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.

இந்நிலையில் நாம் சரி வர தூங்க விட்டால் உடலில் எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 7 லில் இருந்து 8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். குறைவான தூக்கத்தால் இரத்த அழுத்தம் உட்பட அனைத்து பிரச்சனைகளும் வந்து விடும்.

ஐந்தில் இருந்து 6 மணிநேரம் தூங்குபவர்களுக்கு இதய ஆரோக்கியம் கெடுவதற்கான வாய்ப்புகள் 40 முதல் 60 சதவீதம் இருப்பதாக   பல ஆய்வுகள்  கூறுகிறது. எனவே நம்முடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நாம் நன்றாக தூங்க வேண்டியது அவசியம்.