சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்.? வெளியான சுவாரஸ்ய தகவல்.!

வரும்  சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலின் தேதியை அறிவித்ததை தொடர்ந்து, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், கூட்டணியை பலப்படுத்த அதிமுக, திமுக போன்ற முன்னணி கட்சிகள் அதற்கான வேளையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது.

அதன்படி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமாவிற்கு 23 தொகுதிகளை ஒதிக்கீடு செய்வதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் தேமுதிக  தலைவர் விஜகாந்த்தை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தாக கூறப்படுகிறது. விரைவில் தொகுத்து பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அடுத்தபடியாக தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், வரும்  சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் பாஜகவுக்கு ஒதுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.

இன்று புதுச்சேரி, தமிழகத்தில் அமித்ஷா பொது கூட்டம் மற்றும் பேரணியில் கலந்து கொள்ளவுள்ளார். இதனிடையே, நேற்று காலை முதல்வர், துணை முதல்வரை சந்தித்த குழு, இன்று அமித்ஷாவுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளது. சென்னையில் அமித்ஷாவுடன் முருகன், கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர் பணி.! உடனே விண்ணப்பியுங்கள்…

TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)…

5 mins ago

உடல் சூட்டை தணிக்க வீட்டிலேயே கம்மங்கூழ் செய்யலாமா?..

கம்மங்கூழ் -கம்மங்கூழை  வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் கம்மங்கூழும் ஒன்று. 15 வருடங்களுக்கு முன்பு அனைவரது வீடுகளிலுமே…

9 mins ago

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா.? தீர்ப்பு தேதி அறிவிப்பு!

Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ்…

46 mins ago

அதிரவைத்த பாஜக.! விளம்பர செலவு மட்டும் 3,641 கோடி ரூபாய்.!

BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆளும் பாஜக அரசு…

49 mins ago

விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம்…ஆனா இதெல்லாம் செஞ்சாரு..நடன இயக்குனர் எமோஷனல்!

Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ்  மாஸ்டர் தெரிவித்துள்ளார்.  கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல…

51 mins ago

‘தல’ தோனிக்கு கே.எல்.ராகுல் மீண்டும் புகழாரம்! என்ன சொன்னாருன்னு தெரியுமா?

ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…

1 hour ago