ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காதா? விபரம் உள்ளே!

ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது. நாடு முழுவதும் சில சிறப்பு

By leena | Published: Jul 01, 2020 02:24 PM

ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது. நாடு முழுவதும் சில சிறப்பு நாட்களில், வங்கிகளுக்கு விடுமுறைகள் இருக்கும்.  ஆனால், நாடு முழுவதும் வங்கிகளில் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாட்கள் இருக்கும்.   ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு பல விடுமுறை நாட்கள் உள்ளது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு முக்கிய விடுமுறை 'பக்ரீத்'. இந்த பண்டிகை 31ம் தேதி வருகிறது. இந்த மாதத்தில், 5, 11, 12, 19, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும். ஜூலை மாதத்தில்  எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது  என்பது பற்றிய விபரம் பின்வருமாறு,
  • ஜூலை 23 ஆம் தேதி அரியாலி டீஜ் தினத்தை முன்னிட்டு அரியானாவில் வங்கிகள் மூடப்படும்.
  • ஜூலை 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் குரு ஹர்கோபிந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வங்கிகள்  மூடப்படும்.
  • ஜூலை 17 ஆம் தேதி யு டிரோட் சிங் தினத்தை முன்னிட்டு மேகாலயாவில் வங்கிகள் மூடப்படும்.
  • ஜூலை 6 ஆம் தேதி MHIP தினத்தை முன்னிட்டு மிசோரத்தில் வங்கிகள் மூடப்படும்.
  •  ஜூலை 23 ஆம் தேதி அன்று அரியாலி டீஜ் பண்டிகையையொட்டி பஞ்சாபில் வங்கிகள் மூடப்படும்.
  • ஜூலை 13 ஆம் தேதி பானு ஜெயந்தியை முன்னிட்டு சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்.
  • ஜூலை 16 ம் தேதி போனலு தினத்தன்று தெலுங்கானாவில் வங்கிகள் மூடப்படும்.
  • ஜூலை 27 அன்று கார்ச்சி பூஜை தினத்தன்று திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்.
Step2: Place in ads Display sections

unicc