கொத்தமல்லி தழையை வைத்து எப்படி ஒரே மாதத்தில் உடல் எடையை குறைப்பது..?

24
கொத்தமல்லி தழையை வைத்து எப்படி ஒரே மாதத்தில் உடல் எடையை குறைப்பது..?

சின்ன பிள்ளைகளை “கொத்தமல்லி கொழுந்தே” என்று பல வீடுகளில் அழைப்பதுண்டு. இது கொத்தமல்லிக்கு கிடைத்த புனை பெயராகும், குழந்தைகளுக்கு கிடைத்த செல்ல பெயராகவும் இருக்கிறது. சமைத்து முடித்த பெரும்பாலான உணவுகளில் கொத்தமல்லியை இறுதியில் மணத்திற்காகவும் சுவைக்காகவும் மட்டுமே சேர்ப்பதாக நம்மில் பலர் நினைப்பதுண்டு.

ஆனால், இந்த காரணத்தை போல மேலும் சில காரணங்களும் உண்டு. கொத்தமல்லியை வைத்து உடல் எடை முதல் அதிகமாக சேர்ந்துள்ள கொலஸ்ட்ரால் வரை மிக எளிதாக குறைக்க முடியும். எப்படி இது சாத்தியப்படும் என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.

செரிமானத்திற்கு
கொத்தமல்லி தழையில் நாம் நினைப்பதை விட அதிக அளவில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. உணவில் இறுதியாக கொத்தமல்லியை சேர்ப்பதற்கு இதன் செரிமான சக்தியும் ஒரு காரணம். மேலும், மலச்சிக்கலினால் தினமும் காலையில் அவதிப்படுவோருக்கு இது நல்ல தீர்வை தரும்.

இரத்த அழுத்தம்
கொத்தமல்லி தழை இரத்த ஒட்டகத்தை சீரான அளவில் வைத்து கொள்ளும். இரத்த நாளங்களை இலகுவாக வைத்து எப்போதுமே மிதமான மன நிலையை உண்டாக்கும். உயர் இரத்த ஓட்டம் உள்ளவர்களுக்கு கொத்தமல்லி சிறந்த மருந்து.

எலும்புகளுக்கு
கால்சியம் சத்து கொத்தமல்லியில் அதிக அளவில் இருப்பதால் எலும்புகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்து கொள்ளும். எலும்பு தேய்மானம், எலும்புகளில் ஏற்பட கூடிய நோய்கள் முதலியவற்றை இது தடுத்து விடும்.

உடல் எடை
உடல் எடையை குறைக்க பெரிதாக நீங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. வெறும் கொத்தமல்லி தழையை வைத்தே உடல் எடையை குறைத்து விடலாம். அதற்கு முதல் நாள் இரவே ஒரு பாட்டில் நீரில் அரை கைப்பிடி கொத்தமல்லியை பொடியாக நறுக்கி போட்டு கொள்ளவும்.

பிறகு இந்த நீரை மறுநாள் காலையில் வடிகட்டியோ அல்லது அப்படியே குடித்தும் வரலாம். இது போன்று தினமும் செய்து வந்தால் உடல் எடை 1 மாதத்திற்குள் குறையும். இதை நீங்கள் ஜுஸ் போன்றும் தயாரித்து குடிக்கலாம். உடல் எடையுடன் சேர்த்து கொலஸ்ட்ராலையும் இது கரைத்து விடும்.