பிரண்ஷிப் டேய்க்கு பிரண்ஷிப் டீமின் ட்ரீட் இல்லேனா எப்படி.? ஸ்பெஷலாக வருகிறது லாஸ்லியாவின் #Friendship மூவி ட்ரீட்.!

லாஸ்லியாவின் பிரண்ஷிப் படத்திலிருந்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை பிரண்ஷிப் டேய் ட்ரீட்டாக வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நண்பர்கள் தினம் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக பிரண்ஷிப் படத்திலிருந்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை நடிகர் ராணா டக்குபதி அவர்களால் இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ஷிப் படத்தினை
ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர்.

மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாகவும் , சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் டி. எம். உதயகுமார் இசையமைத்துள்ளார்.