கணவன் மனைவிக்கிடையே நடக்கும் சிவில் விவகாரத்தை கிரிமினல் குற்றமாக எப்படி கருத முடியும்?மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி கேள்வி

மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  இஸ்லாமிய பெண்களின் உரிமையை பற்றி மட்டுமே அரசு கவலைப்படுவது ஏன் ?என்றும்    நாட்டில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களின் உரிமை குறித்து ஏன் அரசு அக்கறை கொள்ளவில்லை?  என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும்  குறிப்பிட்ட சமுதாயம் மற்றும் மதத்தை குறி வைத்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த முத்தலாக் தடை சட்டத்தை திமுக எதிர்க்கிறது. கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இந்த சிவில் விவகாரத்தை கிரிமினல் குற்றமாக எப்படி கருத முடியும்? என்றும் எந்த ஒரு நாட்டிலாவது இப்படி ஒரு சட்டத்தை கொண்டுவர முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்  திமுக எம்.பி.கனிமொழி.