வித்தியாசமான சுவையுடன் தக்காளி பூரி செய்வது எப்படி?

வித்தியாசமான சுவையுடன் தக்காளி பூரி செய்வது எப்படி?

நாம் பூரி அனைவர் வீட்டிலும் சாதாரணமாக செய்து அதனுடன் குருமா அல்லது, சாம்பார் வைத்து சாப்பிடுவோம். ஆனால், தக்காளி பூரி யாரும் சாப்பிட்டிருக்க மாட்டோம். எவ்வாறு செய்யலாம், வாருங்கள் பாப்போம்.

தேவையான பொருள்கள்

  • கோதுமை மாவு
  • தக்காளி
  • சிவப்பு மிளகாய்
  • உப்பு
  • எண்ணெய்
  • நெய்

செய்முறை

முதலில் தக்காளியை நன்றாக நீரில் அவியவிடவும், அதன் பின்பு சிவப்பு மிளகாயையும் சற்று அவியவிடவும். பின்பு இவை இரண்டையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

அதன் பின்பு சப்பாத்திக்கு மாவு குலைப்பது போல, தண்ணீருக்கு பதிலாக அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் மிளகாய் கலவை மற்றும் நெய் ஊற்றி பிசையவும்.

பின்பு எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் அட்டகாசமான தக்காளி பூரி தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயம் விரும்புவார்கள்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube