இல்லத்தரசிகளே..! இதுவரை நீங்கள் அறிந்திராத கிச்சன் டிப்ஸ் இதோ…!

இல்லத்தரசிகளே..! இதுவரை நீங்கள் அறிந்திராத கிச்சன் டிப்ஸ் இதோ…!

இன்றைய பெண்கள் பலரும் தங்களது சமையலறையில் சில கடினமான சூழ்நிலைகளை சந்திப்பதுண்டு. தற்போது இந்த பதிவில், இல்லத்தரசிகள் அறிந்துகொள்ள வேண்டிய சில புதிய டிப்ஸ் பற்றி பார்ப்போம்.

டிப்ஸ் 1

வாணலியில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்கும் போது எண்ணெயில் சிறிதளவு தண்ணீர் பட்டாலும், நம் மீது தெறிக்கும். அப்படி சமயங்களில் மைதா அல்லது கோதுமை மாவை சிறிதளவு சேர்த்தால் என்னை தெறிப்பது நின்று விடும்.

டிப்ஸ் 2

பச்சை மிளகாயை நாம் காம்புகளை எடுத்து விட்டு குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைப்பது உண்டு. ஆனால் அது குறிப்பிட்ட சில நாட்களில் அழுகிவிடும். மேலும் சில நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பச்சை மிளகாயோடு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஒரு பாட்டிலில் போட்டு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். அப்படி வைத்தால் மேலும் சில நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

டிப்ஸ் 3

சில சமயங்களில் புளியை கரைப்பதற்காக நாம் ஊற வைப்பதற்கு மறந்துவிடுவோம். அந்த சமயங்களில் உடனடியாக புளியை கரைக்க வேண்டுமென்றால், அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்தால் நன்றாக கரைந்துவிடும்.

டிப்ஸ் 4

நமது தேவைக்காக பாதாம்பருப்பை வாங்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து வைத்தால் எறும்பு வந்து விடும். எனவே பாட்டிலில் போட்டு அதனுடன் சிறிதளவு சீனி சேர்த்து இறுக்கமாக மூடி வைத்தால் நீண்ட நாட்கள் பழுதாகாமல் அப்படியே இருக்கும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube