தமிழகத்தில் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. இந்த வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மதிய வேளையில் மக்கள் வீதியில் நடமாடவே பயப்படும் அளவிற்கு வெளியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இன்று மட்டும் தமிழ் நாட்டில் எட்டு இடங்களில் வெயில் 100 பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. அந்த ஊர்களின் விவரம் பின்வருமாறு, திருத்தணி – 107, வேலூர், திருச்சி, மதுரையில் 106, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தியில் – 104, சேலம், மீனம்பாக்கத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹூட் வெப்பம் பதிவு ஆகியுள்ளது. இன்னும் கோடை காலம் முடியஎத்தனை நாள் என்று மக்கள் எண்ணி வருகின்றனர்.